• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் உதயமானது மாநகர வணிகர் சங்க பேரமைப்பு!

  • Share on

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தூத்துக்குடி மாநகர தொடக்க விழா தூத்துக்குடி பீச் ரோட்டில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் துணைத் தலைவர் வெற்றி ராஜன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகர வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஜெயபாலன், செயலாளர் கிங்ஸ், பொருளாளர் பட்டு ராஜா, துணைத் தலைவர் ஞான செல்வம், துணை செயலாளர்கள் ரமேஷ் குமார், செல்லத்துரை, வழக்கறிஞர் பிலிப்ஸ் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த தொடக்க விழாவை முன்னிட்டு, சமூகத்தில் அமைதியான முறையில் தொழில்துறை வளர பெரிதும் துணை நிற்பது இளைஞர்களா? பெரியோர்களா  என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் நடுவராக ராஜபாளையம் கவிதா ஜவகர் பங்கேற்றார்.


சமூகத்தில் அமைதியான முறையில் தொழில்துறை வளர பெரிதும் துணை நிற்பது இளைஞர்களே என்ற தலைப்பில் ராஜ்குமார், வளர்மதி ஆகியோரும் பெரியோர்களே என்ற தலைப்பில் துரைப்பாண்டியன், ராஜராஜேஸ்வரி ஆகியோரும் பேசினார்.  


இவ்விழாவில் வணிகர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

  • Share on

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் : பகவதி அம்மன் கோயிலில் தூத்துக்குடி அதிமுக மாமன்ற உறுப்பினர் சிறப்பு வழிபாடு!

தூத்துக்குடியில் ரூ 515.72 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் - கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்

  • Share on