விளாத்திகுளத்தில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் இன்று (7.1.2021) வழங்கினார்.
ஒவ்வொரு கல்வியாண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரசின் சார்பில் நலத்திட்ட உதவிப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதும் ஒன்று.
கொரோனா பரவலை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு அனுமதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை தடையில்லாமல் வழங்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு, எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் நிலையும் உள்ளது. இதனால், அப்போது மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள நலத்திட்ட உதவியாக, விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல் மாநில அளவில் துவங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று ( 7.1.2021) விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட, எட்டயபுரம் பாரதியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, எட்டயபுரம் அரசு உதவி பெறும் இராஜா மேல்நிலைப்பள்ளி, விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளி, புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியருக்கு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், புதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுசீலா தனஞ்செயன், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இரா.முனிய சக்தி ராமச்சந்திரன், புதூர் ஒன்றியச் செயலாளர் ஞானகுரு சாமி, விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், நடராஜன்,
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் போடு சாமி, மாவட்ட பிரதிநிதியும் , நெல்லை மண்டல வேளாண் விற்பனை ஒழுங்கு முறை குழு உறுப்பினர் வைப்பார் செண்பகப்பெருமாள், எட்டையபுரம் நகரச் செயலாளர் ஆழ்வார் உதயகுமார், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்கள் சுபாஷ்சந்திரபோஸ், வெற்றிவேலன், புதூர் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் வெம்பூரார், ரெகுராமபுரம் கண்ணன், ஜெகதீசன், புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மோகன், அம்மா பேரவை துணைச் செயலாளர் மாரிமுத்து பாண்டியன், நகர மகளிர் அணிச் செயலாளர் செல்வி, அவைத் தலைவர் கணேசன், பாலமுருகன், வெம்பூர் செல்வம்
பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.