நீண்ட ஆயுளோடு, மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டி அவரது பிறந்த நாளில் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக மாமன்ற உறுப்பினரும் கொறடாவுமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்தார்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி, அதிமுக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் ஆகியோரது ஆலோசனையின் பேரில், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடாவும், மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி,கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில், எடப்பாடி பழனிச்சாமி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழகத்தை மீண்டும் வழி நடத்த வேண்டி சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.