• vilasalnews@gmail.com

தமிழகத்தை உலுக்கும் கள்ளச்சாராய பலி - தூத்துக்குடி வேட்டையில் ஒருவர் கைது!

  • Share on

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராய ஊறல் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து, 15 லிட்டர் கள்ளச்சாராய  ஊறல், 1 லிட்டர் கள்ளச்சாராயம், கேஸ் அடுப்பு மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் தலைமையில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் முத்து மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (14.05.2023) சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சடையன்கிணறு லயன் தெருவை சேர்ந்த பால் மகன் சின்னத்துரை (42) என்பவருக்கு சொந்தமான சடையன்கிணறு பகுதியிலுள்ள தோட்டத்தில் சோதனை செய்ததில், அங்கு அவர் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஊறல் மற்றும் கள்ளச்சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார்  சின்னத்துரையை கைது செய்து அவரிடமிருந்த 15 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 1 லிட்டர் கள்ளச்சாராயம், ஒரு கேஸ் ஸ்டவ் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை குடித்த 12 பேர் இதுவரை உயிரிழந்திருந்தனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் போன்ற ரசாயனங்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றும் காவலர்கள் தீவிர கவனத்துடனும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாத காவலர்கள் மீது உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


இதனைத்தொடர்ந்து கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா, செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

  • Share on

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழா ஜோதி தொடர் ஓட்டத்திற்கு காவல்துறை கெடுபிடி!

தூத்துக்குடியில் மதுபோதையில் கார், ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய 3 பேர் கைது

  • Share on