பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெறக்கூடிய ஜோதி தொடர் ஓட்டப்பேரணிக்கு காவல்துறை தேவையற்ற கெடுபிடி காட்டுவதாக கூறி கட்டபொம்மன் வம்சாவழியினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 12.05.2023 மற்றும் 13.05.2023 தேதிகளில் இந்திய விடுதலைப்போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் குல தெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தில் 67 வது ஆண்டு சித்திரை திருவிழா நடைபெறுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்டபொம்மன் வம்சாவழியினரால் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டப் பேரணி கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இந்தநிலையில், இன்று பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெறக்கூடிய வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டப் பேரணிக்கு காவல்துறை தேவையற்ற கெடுபிடி காட்டுவதாக கூறி கட்டபொம்மன் வம்சாவழியினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.