• vilasalnews@gmail.com

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழா திடீர் நிறுத்தம் - தூத்துக்குடியில் பரபரப்பு!

  • Share on

இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெற இருந்த பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பால்  தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 12.05.2023 மற்றும் 13.05.2023 தேதிகளில் இந்திய விடுதலைப்போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் குல தெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தில் 67 வது ஆண்டு சித்திரை திருவிழா நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்டபொம்மன் வம்சாவழியினரால் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டப் பேரணி கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இந்தநிலையில், இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டப் பேரணிக்கு காவல்துறை ஒத்துழைக்க மறுப்பதாக கூறி, இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெற இருந்த பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா தற்போது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share on

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவிற்கு 2050 போலீசார் பாதுகாப்பு!

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழா ஜோதி தொடர் ஓட்டத்திற்கு காவல்துறை கெடுபிடி!

  • Share on