தூத்துக்குடியில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க பணம் கேட்டால் உடனடியாக மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் ஜெயசீலன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு எவ்வித கட்டணமின்றி பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது.
ஒரு சில நபர்கள் சட்டவிரோதமாக இணைப்புக்கு பணம் பெறுவதாக பொது மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் உள்ளது.
எனவே, மாநகராட்சி பகுதியில் உள்ள பொது மக்கள் மாநகராட்சி பெயரை பயன்படுத்தி தனியார் மற்றும் தனிப்பட்ட நபர் எவரேனும் பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் ஏதும் கேட்டால் மாநகராட்சி அலுவலகத்திற்கு 0461-2326901-903 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கவும்.
பாதாளச் சாக்கடை இணைப்பு திட்டமானது சீர்மிகு திட்டத்தின் கீழ் அரசால் கட்டணமின்றி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.