தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க நடக்க முடியாத வயதானவர் வந்ததையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தரை தளத்திற்கு வந்து நேரடியாக மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை சன்னதி தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தாரான ராமகிருஷ்ணன் என்பவர் இன்று (05.05.2023) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரடியாக சந்தித்து புகார் மனு கொடுப்பதற்காக மாவட்ட காவல்துறை அலுவலகம் வந்திருந்தார். மேற்படி ராமகிருஷ்ணன் நடக்க முடியாத வயதானவர்.
இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் தரை தளத்திற்கு இறங்கி வந்து மேற்படி ராமகிருஷ்ணன் என்பவரிடம் பிரச்சனையை கேட்டறிந்து புகார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.