• vilasalnews@gmail.com

முதலமைச்சர் காவலர் பதக்கம் பெற்ற தூத்துக்குடி பெண் காவலருக்கு எஸ்பி பாராட்டு

  • Share on

முதலமைச்சர் காவலர் பதக்கம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை பெண் தலைமை காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

தூத்துக்குடி ஆயுதப்படையில் பணியாற்றிவரும் பெண் தலைமை காவலர் ஜெயாவின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கிகரித்து 2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கத்தை கடந்த 26.01.2023 அன்று வழங்கி கௌரவித்தது.

மேற்படி முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்ற பெண் தலைமை காவலர் ஜெயா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை இன்று (05.05.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நேரில் சந்திந்து வாழ்த்து பெற்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முதலமைச்சர் காவலர் பதக்கம் பெற்ற பெண் தலைமை காவலரை பாராட்டி மென்மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்தினார்.

  • Share on

முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் கைதானவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

அப்படியா... கேள்விபட்டதும் தனது அறையில் இருந்து கீழே இறங்கி வந்து பெற்றுக்கொண்ட தூத்துக்குடி எஸ்பி!

  • Share on