• vilasalnews@gmail.com

முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் கைதானவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

  • Share on

முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் கைதான  2 பேரும் உட்பட்ட  4 பேர் இன்று ஓரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

கடந்த 25.04.2023 அன்று முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் சேவியர் (55) என்பவரை முன்விரோதம் காரணமாக அவரது அலுவலகத்தில் வைத்து கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி முறப்பநாடு கலியாவூர் வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர்களான ராமசாமி மகன் ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு (41) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட  ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமாலும்,

கடந்த 2021ம் ஆண்டு ஜுலை மாதம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றம் செய்த வழக்கில் ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்தவர்களான இனிகோ மகன் ஜெப்ரின் (25) மற்றும் பிரவிந்தன் மகன் ரெவின்டோ (23) ஆகியோரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட ஜெப்ரின் மற்றும் ரெவின்டோ ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கௌரி மனோகரியும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி முறப்பநாடு கலியாவூர் வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர்களான ராமசாமி மகன் 1) ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு, முருகன் மகன் 2) மாரிமுத்து, ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்தவர்களான இனிகோ மகன் 3) ஜெப்ரின் மற்றும் பிரவிந்தன் மகன் 4) ரெவின்டோ ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Share on

சமக நிறுவனத் தலைவர் பிறந்த நாள் - தூத்துக்குடியில் கட்சியினர் கொண்டாட்டம்!

முதலமைச்சர் காவலர் பதக்கம் பெற்ற தூத்துக்குடி பெண் காவலருக்கு எஸ்பி பாராட்டு

  • Share on