தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கட்சியினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில், சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவரும், நாடார் பேரவை மாநில தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் 67 வது பிறந்தநாள் விழா, மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், நாடார் பேரவை மாவட்டத் தலைவர் அருண் சுரேஷ்குமார் மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ் முன்னிலையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
இவ்விழாவில், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ராஜன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் பொன்மணி, மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், மாவட்ட வர்த்தகர் அணி துணைச் செயலாளர் கணபதி, மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முருகன், மாநகரப் பிரதிநிதி சாமுவேல், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி முத்துக்குமரன், அவைத்தலைவர் ஜெயசிங், ஆத்தூர் நகர செயலாளர் கனகராஜ், மாநகர தொண்டரணி துணை செயலாளர் காமராஜ், வார்டு செயலாளர்கள் பார்த்திபன், சந்தனராஜ், செந்தூர்பாண்டி, முருகேசன்,ஜெயபால், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.