கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டியை சி.த செல்லப்பாண்டியன் வழங்கினார்.
தூத்துக்குடியில் உள்ள கால்டுவெல் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு 1920-1921 கல்வி ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகளை அப்பள்ளியின் தாளாளரும் முன்னாள் அமைச்சர் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் தலைவருமான சி.த. செல்லப்பாண்டியன் வழங்கினார். விழாவில் மொத்தம் 162 மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஞானகௌரி முன்னிலை வகித்தார், பள்ளியின் தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர் வரவேற்புரை நிகழ்த்தினார். உடற்கல்வி இயக்குநர் பெலின் பாஸ்கர் , தொழிற்கல்வி ஆசிரியர் பால்ராஜ் மற்றும் தூத்துக்குடி அரசு வழக்கறிஞர் ராஜராம், நெல்லை தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு இணையம் தலைவரும், முன்னாள் துணை மேயருமான சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.