• vilasalnews@gmail.com

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் ஒரே நாளில் 64 மனுதாரர்கள் நேரடியாக புகார் மனு அளிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின்படி தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி புதன் கிழமையான இன்று (03.05.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 27 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 37 மனுதாரர்கள் என மொத்தம் 64 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் ரோந்து சென்ற மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் சிக்கினர்!

என்னா வெயிலு... வங்கி ஏடிஎம் மைய குளுகுளு ஏசியில் மதுபோதையில் படுத்து உறங்கிய குடிமகன்!

  • Share on