• vilasalnews@gmail.com

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் - அமைச்சர் கீதாஜீவன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்!

  • Share on

தூத்துக்குடி சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று புதன்கிழமை (மே 3) நடைபெற்றது.

இக்கோவிலில் சித்திரை திருவிழா, கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலை மாலையில் சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா ஆகியவை நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை (மே 3) காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இத்தோரட்டத்தை முன்னிட்டு, நான்கு ரத வீதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் தலைமையில், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

  • Share on

தூத்துக்குடியில் மாணவர்கள் வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடு!

40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.40 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

  • Share on