தூத்துக்குடியில் தமிழக பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளர் படு கொலை செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளருமான சங்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார்.
இதனை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி தி.மு.க அரசை கண்டித்தும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் இன்று தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியசீலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மாநில செயற்குழு உறுப்பினர் பால்ராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் பாலமுருகன், மண்டல தலைவர்கள் ராஜேஷ் கனி, சிவகனேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் காளிராஜ், துணை தலைவர் ஜெயக்குமார், அணி பிரிவு மாவட்ட தலைவர்கள் ஓம் பிரபு, வீரமணி, லோபோ, ரவிச்சந்திரன், சின்ன தங்கம், விஜயன், நாச்சியார், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மகளிரணி மாவட்ட தலைவர் தேன்மொழி, இளைஞரணி மாவட்ட தலைவர் விக்னேஷ், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம், மாவட்ட துணைத் தலைவர் தங்கம் ஆகியோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.