• vilasalnews@gmail.com

நாளை தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

  • Share on

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது.

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பாரம்பிரியால் அம்பாள், உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.

தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபா ஆராதனைகள், காலை மாலை வேளைகளில் ரத வீதி உலா வருதல் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது நாளை ( மே 3ந் தேதி ) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை காலை கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், சுவாமி, அம்பாள் பரிவார மூர்த்திகளுடன் தேருக்கு எழுந்தருதல் நடக்கிறது.  இதனைத் தொடர்ந்து தேரடி மாடனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் காலை 10 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடக்கிறது.

இந்த தேரோட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள்கள் திரளானோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும், தேருக்கு முன்பாக பாண்டிச்சேரி, விருதாச்சலம், கரூர் சிவ தொண்டர்களின் சிவ கைலாய சிவ பூதக்கண வாத்தியங்கள், தேவார இன்னிசை, தேவ பாராயணம், யானை, ஆடும் குதிரை, மயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள், மாணவ மாணவிகளின் வீர விளையாட்டுகளுடன், சிறிய தேரில் மகா கணபதியும், முருகப்பெருமானும் பெரிய தேரில்  சுவாமி சங்கர ராமேஸ்வரர் பாகம் பிரியாள் அம்பாளும் ரத வீதியில் தேரில் பவனி வருகின்றனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு சிவன் கோவில் வளாகம், ராசி திருமண மண்டபம், மாநகராட்சி திருமண மண்டபம் ஆகிய மூன்று இடங்களில் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

நாளை நடைபெற உள்ள தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (மே 2 ) தேர் கடாட்சம் நடைபெறுகிறது.

  • Share on

தூத்துக்குடி மேலூரில் மே 31 வரை ரயில்கள் நிற்காது!

தூத்துக்குடியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

  • Share on