வாஞ்சி மணியாச்சி தூத்துக்குடி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடப்பதால் மேலூர் ரயில் நிலையத்தில் வரும் மே 31ஆம் தேதி வரை ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மதுரை தொடங்கி நெல்லை வரை இப்பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. நெல்லை முதல் நாகர்கோவில் வரையும், வாஞ்சி மணியாச்சி தொடங்கி தூத்துக்குடி வரையும் இப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தூத்துக்குடி பகுதியில் தற்போது இரட்டை ரயில் பாதை பணிகளோடு நடைமேடை மாற்றி அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றது.
எனவே முத்து நகர் எக்ஸ்பிரஸ், நெல்லை - தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட ரயில்கள் வரும் மே 31ஆம் தேதி வரை மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.