சாத்தான்குளம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் முத்து மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (29.04.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தான்குளம் கொம்பன்குளம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தின் அருகில், கொம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர்களான முத்து கருப்பன் மகன் அம்மமுத்து (48), மூக்கையா மகன் முத்து (54), தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சத்தியராஜ் (31), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் கண்ணன் (37) மற்றும் திருநெல்வேலி பாரதியார் தெருவை சேர்ந்த தங்கபாண்டி மகன் ராஜா (41) ஆகிய 5 பேரும் சேர்ந்து சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் அம்மமுத்து, முத்து, சத்தியராஜ், கண்ணன் மற்றும் ராஜா ஆகிய 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூபாய் 2,59,800 பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.