தூத்துக்குடி அருகே அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியா புரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (56). இவர் முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இன்று காலை அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சராமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்று மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டதால் மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கலியாவூரைச் சேர்ந்த ராம சுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாரிமுத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ்-க்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். விஏஓ படுகொலை சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.