தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த டூவிபுரம் நியாயவிலை கடை இடமாற்றம் செய்யப்பட்டு, தற்காலிகமாக டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் இன்று அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு டூவிபுரம், மணி நகர், அண்ணாநகர் பகுதியின் நியாயவிலை கடையானது புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த நிலையில், அவை தங்களுக்கு தொலை தூரமாக இருப்பதாகவும், அந்த நியாயவிலை கடையை பொதுமக்கள் நலன் கருதி டூவிபுரம், மணி நகர், அண்ணாநகர் ஆகிய ஏதேனும் ஒரு பகுதியில் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை அவர்களது சார்பாக 30 வது மாமன்ற உறுப்பினர் அதிஷ்டமணி அமைச்சர் கீதாஜீவனின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதையடுத்து, புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு டூவிபுரம், மணி நகர், அண்ணாநகர் பகுதிக்கான நியாயவிலை கடையை, தற்காலிகமாக டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில், தனது சொந்த செலவில் அமைச்சர் கீதாஜீவன் அமைத்து இன்று ( 24.3.23 ) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வட்ட வழங்கல் தனி வட்டாட்சியர் ஜஸ்டின் செல்லத்துரை, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், 30 வது மாமன்ற உறுப்பினர் அதிஷ்டமணி, அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.