நெய்தல் கலை விழாவின் முன்னோட்ட நிகழ்வாக, முத்துநகர் கடற்கரையில் நேற்றைய ( 23.4.23 ) மாலைப்பொழுதில், ஆன் தி ஸ்ட்ரீட்ஸ் ஆப் சென்னை ( On the Streets of Chennai ) குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் பொதுமக்களுடன் அமர்ந்து உற்சாகமாக கண்டு ரசித்தனர்.