• vilasalnews@gmail.com

திட்டங்குளத்தில் மார்க்கெட் நடத்த அனுமதிக்க வேண்டும் - தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் வலியுறுத்தல்!

  • Share on

தூத்துக்குடி பாளைரோடு பிரஸ் கிளப் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் நிறுவனத்தலைவர் சந்திரன் ஜெயபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

மே 5 ம் தேதி 40-வது வணிகர் தின கோரிக்கை மாநாடு சென்னை மாத வரத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டில், சிறு வணிக கடைகளுக்கு மின்கட்டண சலுகை கோருதல், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்கு உட்படுத்தக் கோருதல், சொத்துவரி உயர்வை 50% குறைக்கக் கோருதல், ஆன்லைன் வர்த்தகத்தை நெறிமுறைப்படுத்தி கலாச்சாரம் சார்ந்த தமிழக வணிகத்தை காக்கக் கோருதல் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளோம். மாநாட்டில், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர். அவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் போது, அவர்கள் வாயிலாக நாங்கள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் அமைந்துள்ள நகராட்சி காய்கறி மார்க்கெட்டை நகராட்சி நிர்வாகம் வணிகர்களின் எதிர்ப்பை மீறி இடித்ததை வன்மையாக கண்டிக்கிறோம், காய்கறி மார்க்கெட் வணிகர்கள் தாங்கள் சொந்தமாக வாங்கிய இடத்தில் நடத்தி வந்த மார்க்கெட்டையும் மூடச்சொல்லி வணிகர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். திட்டங்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தனியார் இடத்தில் நடந்து வரும் இந்த மார்க்கெட்டை நம்பி ஆயிரக்கணக்கான வணிகர்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் உள்ளனர். இந்த காய்கறி மார்க்கெட்டை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் வணிகர்கள் சுதந்திரமாக தொடர்ந்து நடத்தி வர அனுமதிக்கவும், பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு தரவும் தமிழ்நாடு அரசிற்கு வணிகர்கள் மகாஜன சங்கம் மாநாட்டின் மூலம் கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மாநிலத் தலைவர் மாரித்தங்கம், தூத்துக்குடி மாநகர தலைவர் லிங்க செல்வன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் தாளமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாவட்ட பொருளாளர் முத்து, மாவட்ட துணை தலைவர் எபினேசர் எபி, மாநிலத் துணைத் தலைவர் ஐயர் மற்றும் சதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : தமிழக சட்ட சபையில் அனல் பறந்த விவாதம்!

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் நெய்தல் கலை விழா முன்னோட்டம்!

  • Share on