• vilasalnews@gmail.com

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : தமிழக சட்ட சபையில் அனல் பறந்த விவாதம்!

  • Share on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களை சுட்டு வீழ்த்தியது ஏன்? என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கேள்வி எழுப்பியதால் சட்டசபையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி :  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை புடுங்கி மனிதத் தன்மையற்று அராஜகமாக நடந்து கொண்ட சம்பவம், காவல் நிலையத்தில் வீடியோ கேமரா பழுதடைந்ததால் இந்த நிகழ்வு குறித்து பதிவுகள் இல்லை என்று விசாரணை அதிகாரியிடம் கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

முதல்வர் மு க ஸ்டாலின் : அம்பாசமுத்திரத்தில் நடந்த சம்பவம் குறித்து தகவல் வெளியான உடனேயே அந்த காவல் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். விசாரணை நடத்துவதற்காக ஐஏஎஸ் அதிகாரி அமுதா அங்கு சென்றார். தனது இடைக்கால அறிக்கையையும் அவர் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் ரகுபதி :  அருணா ஜெகதீசன் அளித்துள்ள விசாரணை அறிக்கையில் ஒவ்வொரு நிமிடமும் நடந்த நிகழ்வுகள் முதலிடம் சொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி : 144 தடை உத்தரவு போட்ட நிலையில் அதை தாண்டி திமுக எம்எல்ஏ போராட்டம் நடத்தினார் அதை எப்படி அனுமதிக்க முடியும்.

அமைச்சர் கீதா ஜீவன் :  இந்த போராட்டம் 100 நாள் நடந்தது. துறை அமைச்சரும், மாவட்ட அமைச்சரும் அந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மாவட்ட ஆட்சியர் அன்று அங்கு  இல்லை.  அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு தான் இதற்கு காரணம்.

எடப்பாடி பழனிச்சாமி : எம்எல்ஏ என்பவர் சட்டத்தை மதிக்க வேண்டும்.

அமைச்சர் ரகுபதி :  காக்கா குருவி போல் சுடப்பட்டதாகவும், வேனுக்கு மேல் நின்று சுட்டதாகவும் விசாரணை அறிக்கையிலே உள்ளது.

முதல்வர் மு க ஸ்டாலின் : அங்கு 100 நாட்கள் போராட்டம் நடந்திருக்கிறது. அப்போது ஏன் முதல்வர் அவர்களை அழைத்து பேசவில்லை? அமைச்சர்களும் பேசவில்லை. அவர்கள் மாவட்ட ஆட்சியரை தான் சந்திக்க சென்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி :  போராட்டக்காரர்களை 14 முறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அவை முன்னவர் துரைமுருகன் : கடைசி நாள் போராட்டம் அன்று மாவட்ட ஆட்சியர் அங்கு இருக்க வேண்டாமா? எனவே துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சியரும் ஒரு காரணம்.

எடப்பாடி பழனிச்சாமி : அது 20 ஆண்டுகால போராட்டம் அதிமுக ஆட்சியில் தான் அந்த ஆலை மூடப்பட்டது.

முதல்வர் மு க ஸ்டாலின் :  முதல்வராக ஜெயலலிதா இருந்த போது தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

  • Share on

தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது - 800 கிலோ அரிசி பறிமுதல்!

திட்டங்குளத்தில் மார்க்கெட் நடத்த அனுமதிக்க வேண்டும் - தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் வலியுறுத்தல்!

  • Share on