• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது - 800 கிலோ அரிசி பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் பாரத் லிங்கம் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தட்டி அய்யன், ஏட்டு கந்தசுப்பிரமணியன் ஆகியோர் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாப்பாத்தி அகதிகள் முகாம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டதில், அந்த காரில் சுமார் 40 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் மொத்தம் 800 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  உடனடியாக போலீசார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்திய கோவில்பட்டி செண்பகவல்லி நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் ராஜா (  27 ), பண்ணை தோட்ட தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் மாரிச்செல்வம் ( 25 ), பூரணம்மாள் காலனியைச் சேர்ந்த சேர்மக்கனி மகன் சுந்தர் ( 20 ) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

விசாரணையில், குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

  • Share on

தூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் - சமத்துவ மக்கள் கழகம் மரியாதை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : தமிழக சட்ட சபையில் அனல் பறந்த விவாதம்!

  • Share on