• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் - சமத்துவ மக்கள் கழகம் மரியாதை!

  • Share on

தூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்திற்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மீகம் போன்ற பல்வேறு துறைகளில் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், மாவட்ட செயலாளர் டேனியல்ராஜ், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட துணை செயலாளர்கள் மில்லை தேவராஜ், அருள்ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம், மாநகர செயலாளர் உதயசூரியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

திருச்செந்தூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது - 3 கிலோ கஞ்சா பறிமுதல்!

தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது - 800 கிலோ அரிசி பறிமுதல்!

  • Share on