• vilasalnews@gmail.com

கின்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவசம் ஒப்புத்தல் போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு அண்ணாமலை பரிசு வழங்கினார்

  • Share on

தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவசம் ஒப்புத்தல் போட்டியில் வெற்றி பெற்ற 100 மாணவ, மாணவியர்களுக்கு தங்க நாணயம் பரிசை பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவசம் ஒப்புத்தல் போட்டியில் வெற்றி பெற்ற 100 மாணவ, மாணவியர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :

பாஜக - அதிமுக கூட்டணியின் பொது எதிரி திமுக என்பதில் சந்தேகம் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. இதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். இதைவைத்து சிலர் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார்கள். என்னைப் பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வருமா? என்பது குறித்து பொங்கலுக்கு பின்னர் தேர்தல் பணிகள் துவங்கியதும் தெரியவரும். 

கட்சி மேலிடம் கட்டளையிட்டால் சட்டமன்ற தேர்தலில் அவர்கள் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.

ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி குரல் கொடுத்திருப்பது, அவருக்கு குடும்பத்திலேயே எதிர்ப்பு இருப்பதை காட்டுகிறது. அமித்ஷாவின் வருகையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்கிறீர்கள். அவரது அரசியல் நிகழ்ச்சிக்கு வரவில்லை, துக்ளக் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார் என்றார். பேட்டியின் போது கின்ஸ் அகாடமியின் தலைவர் எஸ்.பேச்சிமுத்து, மதுரை கணேஷா குரூப் சேர்மன் கே.மோகன் ஆகியோர் உடனிருந்தனர். 


  • Share on

நெல்லை மண்ல வேளாண் விற்பனைக்குழு தலைவராக சி.த.செல்லப்பாண்டியன் பதவி ஏற்பு

விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் வெறிநாய் கடி தொல்லை : கட்டுப்படுத்த, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் கூட்டம்

  • Share on