• vilasalnews@gmail.com

விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்!

  • Share on

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைகால நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க, விளாத்திகுளம் ஒன்றிய அதிமுக சார்பில், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்ட கோடைகால நீர், மோர் பந்தலை, சட்டமன்ற எதிர் கட்சி பொருளாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், இளநீர், மோர், தர்பூசணி மற்றும் பழவகைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், என்.கே.பெருமாள், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமசந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்சிக்கான ஏற்பாட்டுகளை விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், நகர செயலாளர் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்

  • Share on

எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்!

திருச்செந்தூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது - 3 கிலோ கஞ்சா பறிமுதல்!

  • Share on