காச நோயை ஒழிக்க சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அரசின் சுகாதாரத் துறையின் சார்பில் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்ற, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் சுந்தரலிங்கத்திற்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அருண்குமார் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
காசநோயை ஒழிக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டி மத்திய அரசின் சுகாதாரத் துறை தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழை மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் சுந்தரலிங்கம் பெற்றுள்ளார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில், காசநோயை ஒழிக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டி மத்திய அரசின் சுகாதாரத் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழை பெற்று, தூத்துக்குடி மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்த மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் சுந்தரலிங்கத்தை , அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலின் படி, மாநகர் மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில், தூத்துக்குடி மாநகர மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அருண்குமார் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.