• vilasalnews@gmail.com

ஸ்டெர்லைட் போராட்ட பின்னணியின் ஆளுநர் பேச்சு... தூத்துக்குடியில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறதா?

  • Share on

ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக, தூத்துக்குடியில் இன்று ( ஏப்.,8 ) காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது; வெளிநாட்டு பண உதவி இருக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து கூறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் என்பது மக்களால் ஒன்றிணைந்து நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவினால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பின் கீழ் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டவராக அல்லாமல்,  ஒரு அரசியல் இயக்கத்தின் பிரதிநிதி போல பேசி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக அவரிடம் ஆதாரம் இருந்தால், அதனை விசாரணை ஆணையத்திடமோ, சிபிஐ விசாரணையிலோ, நீதிமன்றதிலோ தாக்கல் செய்யலாம். ஆனால், பொதுவெளியில் ஆளுநர் இவ்வாறு பேசுவது ஆளுநர் பதவிக்கு உரிய செயல் ஆகாது என தெரிவித்தார்.

பின்னர், தாங்கள் ஆளுநரின் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், ஆனால், உங்களது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் தனலெட்சுமி என்பவர் ஆளுநரின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கருத்து சரி என்றும், அதை வரவேற்கிறாரே என செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, 

தனலெட்சுமி கூறிய கருத்து அவர் சார்ந்து இருக்கக்கூடிய அறக்கட்டளை அமைப்பின் மூலம் பேசுகிறார் , அவருடைய தனிப்பட்ட கருத்துரிமையின் மூலம் அவர் சொல்லக்கூடிய தனிப்பட்ட கருத்தாகும். அவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியாக பேசினால், அது குறித்து நீங்கள் கேட்கும் போது அவர் மீது கட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

தமிழக ஆளுநர் ஆன்.என்.ரவி, இந்திய குடிமை பணிக்கு தயாராகும் மாணவ, மாணவியருடன் சென்னை ராஜ் பவனில் உள்ள அரங்கில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடினார். அப்போது மாணவர் ஒருவர் வெளிநாட்டு ஒழுங்குமுறை சட்டம் நடைமுறை கூறித்து கேள்வி எழுப்பியதற்கு, ஆளுநர் ஆன்.என்.ரவி அளித்த பதில் குறித்த விவகாரம் தான் தற்போது தமிழகத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

அதாவது, வெளிநாட்டில் இருந்து நன்கொடையாக ஒரு தனிபரோ, தொண்டு நிறுவனமோ ஒரு முறை பணம் பெறுவது பிரச்சனை இல்லை. ஆனால், தொடர்ச்சியாக நன்கொடை வருமானால் இந்த வெளிநாட்டு பணபிரிவர்தனை ஒழுங்குமுறை சட்டம் வரும். இந்த சட்டம் மூலம் வெளிநாட்டு நன்கொடைகள் அனைத்தும் மத்திய அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வரும். இப்படி சில தொண்டு நிறுவனங்களும் வரும் வெளிநாட்டு நன்கொடைகள், தேசத்திற்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மின்னணு தேவைக்கு பயன்படக்கூடிய  முக்கிய பொருளான காப்பர் தேவையை 40 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்தது. இதை முடக்கும் வேலையில் ஈடுபட்டவர்களின் பின்னணியில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டு நிதியை பெற்றுவந்துள்ளது தெரியவந்ததாக கூறினார். இப்படியான நிதியை படிப்படியாக தடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

அதாவது, மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில், மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கான பதிலை ஆளுநர் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்துரிமையின் மூலம் அவர் சொல்லக்கூடிய தனிப்பட்ட கருத்தாக பார்க்க மறந்து, ஆளுநரின் அலுவல் ரீதியான கருத்தாக பார்க்க முடிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகத்திற்கு, தங்களுடைய காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் தனலெட்சுமி தெரிவிக்கும் ஸ்டெர்லைட் ஆதரவு நிலைபாட்டு கருத்தை அவரது தனிப்பட்ட கருத்து கொள்ள வேண்டும் என்று கூறுவது, உங்களுக்கு வந்தா ரத்தம் மற்றவர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்ற சினிமா நகைச்சுவை வசனம் தான் நியாபகத்திற்கு வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது; வெளிநாட்டு பண உதவி இருக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்திற்கு, காங்கிரஸ் மாநில துணை தலைவர் ஏபிசிவி சண்முகம் கண்டனமும், அவர்களது கங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் தனலெட்சுமி ஆதரவளித்து வரவேற்பதும் என காங்கிரஸ் இருவேறு நிலைப்பாட்டோடு இருந்து கொண்டு, அதற்கு புதுவிளக்கத்தோடு சமாளிப்பு தன்மையை செய்து வரும் காங்கிரஸ் மாநில துணை தலைவர் ஏபிசிவி சண்முகத்தின் செயல் அரசியல் அனுபவ ஆழத்தை காட்டுகிறது!

  • Share on

ஏப்.,15ல் ரயில் மறியல்... ஏப்.,30ல் மத்திய அரசு அலுவலகம் முற்றுகை... தொடரும் காங்கிரஸ் தொடர் போராட்டம்!

மத்திய அரசிடம் பதக்கம் பாராட்டு சான்றிதழ் பெற்ற தூத்துக்குடி மருத்துவர் - மாநகர மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் வாழ்த்து!

  • Share on