• vilasalnews@gmail.com

ஏப்.,15ல் ரயில் மறியல்... ஏப்.,30ல் மத்திய அரசு அலுவலகம் முற்றுகை... தொடரும் காங்கிரஸ் தொடர் போராட்டம்!

  • Share on

ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக, தூத்துக்குடியில் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்  கந்தசாமிபுரம் சந்திப்பில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று ( ஏப்.,8 ) சிதம்பர நகரிலும், ஒரிரு தினங்கள் அடுத்து பூபால்ராயர்புரம் சந்திப்பு பகுதியிலும் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து, ஏப்ரல் 15ம் தேதி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் ரயில் மறியல் போராட்டமும், ஏப்ரல் 30ம் தேதி தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசின் மாவட்ட தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டமும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி நடைபெற இருக்கிறது. 

ராகுல்காந்தி பதிவி நீக்க விவகாரத்தை பெரிதாக்க வேண்டும் என்பது எங்களது எண்ணமல்ல. இந்த நாட்டில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை, அநீதிகளை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டிய கடமை அரசியல் கட்சிகளுக்கு உள்ளது என்பதால் காங்கிரஸ் கட்சி இதுமாதிரியான போராட்டங்களை முன்னெடுக்கிறது. 

இந்த நாட்டினுடைய ஜனநாயக குரலை நெரிக்கின்ற பாசிக பாஜக வை கண்டிக்கிற வகையில் ஓர் அணியாக இந்திய அளவில் திரண்டு இருக்கிற எதிர்கட்சிகளை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன், மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் - பொதுமக்களிடம் இருந்து வட்டாட்சியர் மனுக்களை பெற்றார்!

ஸ்டெர்லைட் போராட்ட பின்னணியின் ஆளுநர் பேச்சு... தூத்துக்குடியில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறதா?

  • Share on