• vilasalnews@gmail.com

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஆளுநரின் கருத்திற்கு எதிராக சமக கண்டன ஆர்ப்பாட்டம் - தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம்  சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார்.

நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்புறையாற்றினார்.

கூட்டத்தில் கடந்த 6ம் தேதி சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தூத்துக்குடியில் இயங்கி வந்த நச்சு ஆலை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பெரும் மக்கள் திரள் போராட்டத்தை கொச்சைப் படுத்தியும் நீதி மன்றத்தாலும் தமிழக அரசாலும் தடை செய்யப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும் பேசினார். தொடர்ந்து தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்தும், மத்திய அரசு மக்கள் விரோத ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் வருகின்ற 13.04.2023 வியாழக்கிழமை காலை10மணிக்கு  தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, சமத்துவ மக்கள் கழகம் தலைவர்  எர்ணாவூர் நாராயணனை அழைத்து வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இக்கூட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், துணைச் செயலாளர் மில்லை தேவராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ராஜன், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவைத்தலைவர் மதியழகன், செல்வராஜ், காமராஜ், நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட பொருளாளர் சுப்பையா உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன் - அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் - பொதுமக்களிடம் இருந்து வட்டாட்சியர் மனுக்களை பெற்றார்!

  • Share on