தூத்துக்குடி மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன் என தனது டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் அமைச்சர் கீதாஜீவன் தனது கருத்து பதிவு செய்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது; வெளிநாட்டு பண உதவி இருக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன், தனது டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில்,
"தமிழ்நாட்டு மக்களின் நலன் மீதே அக்கறை இல்லாத ஆளுநர் தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை மதிப்பாரா? தூத்துக்குடி மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன்" என ஆளுநருக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.