• vilasalnews@gmail.com

கோவில்பட்டி சந்தை கடை பிரச்சனை - சட்டசபையில் கடம்பூர் ராஜு கவன ஈர்ப்பு தீர்மானம்!

  • Share on

கோவில்பட்டி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் 397 கடைகளை இடித்து விட்டு ரூபாய் 6.84 கோடி மதிப்பில் புதிதாக 251 கடைகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டசபையில், அதிமுகவை சேர்ந்த கோவில்பட்டி சட்டமன்ற  உறுப்பினர் கடம்பூர் ராஜு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது அவர், ஏற்கனவே இந்த சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வருகிறார்கள். தற்போது 397 கடைகளுக்கு 251 கடைகள் மட்டும் கட்டுவதால் 146 கடைகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்களுக்கும் கடைகளை அருகில் கட்டித் தர வேண்டும். இதற்காக இடத்தையும் காட்டியுள்ளேன் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு,  "உறுப்பினர் சொன்னது போல் அங்கே வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வந்து செல்கிறார்கள். அங்கு இட பற்றாக்குறை இருக்கிறது. எனவே தான் கடைகளை குறைத்து கட்ட முடிவு செய்துள்ளது. இருப்பினும் உறுப்பினர் கடம்பூர் ராஜு குறிப்பிட்டது போன்று அனைவருக்கும் கடைகள் கட்ட இடம் தேர்வு குறித்து ஆய்வு செய்யப்படும்" என்றார்.

  • Share on

இன்று முதல் மூன்று நாட்கள் - அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறை கேட்பு!

திருச்செந்தூரில் பைக் திருடிய தூத்துக்குடி ரவுடி கைது - 2 லட்சம் மதிப்புள்ள பைக் மீட்பு!

  • Share on