தூத்துக்குடியில் இன்று முதல் மூன்று நாட்கள் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று (7ம் தேதி) காலை 10.30 மணிக்கு தனது இல்லத்திலும், மாலை 5.30 மணிக்கு மாநகராட்சி 32 வது வார்டு பகுதியிலும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். நாளை (8ம் தேதி) காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும், மாலை 5.30 மணிக்கு மாநகராட்சி 18 வது வார்டு பகுதியிலும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.
9ம் தேதி காலை 10.30 மணிக்கு சின்னமணி நகர் பூங்கா அருகில் ஆவின் பாலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு மாநகராட்சி 19வது வார்டு பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.