தூத்துக்குடி அருகே இரண்டு குழந்தையுடன் மாயமான இளம் பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள மேல கூட்டுடன்காடு அல்லி குளத்தைச் சேர்ந்த தாமஸ். இவருடைய மனைவி சுதாமதி ( 30 ) இவர்களுக்கு தாரணிகா ( 8 ) என்ற மகளும், ஸ்மித் ( 6 ) மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று சுதாமதி தனது மகள் மகனுடன் ஆட்டோவில் ஏறி வெளியில் சென்றாராம். அதன் பின் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல இடங்களில் அவர்களை தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போனவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் சிப்காட் காவல் ஆய்வாளர் 9498177743 மற்றும் 04612341472 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.