தூத்துக்குடியில் நிறுத்தியிருந்த லாரியில் இருந்து லாரி ஜாக்கியை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மடத்தூர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் லாரி செட் உரிமையாளரான முருகன் என்பவரது லாரி செட்டில் நின்றிருந்த லாரியில் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஜாக்கியை மர்ம நபர் திருடி சென்று விட்டாராம். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் முத்தையாபுரத்தைச் சேர்ந்த சாரதி ( 27 ) என்பவர் ஜாக்கியை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சாரதியை கைது செய்தனர்.