தூத்துக்குடி 2வது ரயில்வே கேட் வரும் 7ம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி முதல் மதுரை வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தற்போது மீளவிட்டான் முதல் தூத்துக்குடி வரை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியை முழுமையாக முடிப்பதற்காக வரும் 7ம் தேதி 2வது ரயில்வே கேட் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 7ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இந்த பாதையில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.