• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் இப்தார் நோன்பு : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

  • Share on

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், "மத வேறுபாடுகளற்ற மத உணர்வை நாம் அனைவரும் மதிக்க வேண்டும், இந்நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்த பிரஸ் கிளப்பிற்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்து வாழ வேண்டும். அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இப்தார் நோன்பு குறித்து செயற்குழு உறுப்பினர் அகமது ஜான் விளக்கி பேசினார்.

இந்நிகழ்வில், பிரஸ் கிளப் தலைவர் காதர் மைதீன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் மாரிமுத்து ராஜ் உள்ளிட்ட பிரஸ் கிளப் நிர்வாகிகள்,  பத்திரிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் வீட்டின் முன்பு பைக் நிறுத்துவதில் தகராறு - 2 ரவுடிகள் உட்பட 8 பேர் கைது!

தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பால் ஒருவர் பலி?

  • Share on