கீழ செக்காரக்குடி பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் மேற்பார்வையில் தட்டாப்பாறை காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சண்முகம் மற்றும் உதவி ஆய்வாளர் பாலன் தலைமையிலான போலீசார் நேற்று (02.04.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தட்டாப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ செக்காரக்குடி பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கீழ செக்காரக்குடி பகுதியை சேர்ந்த ஒளிமுத்து மகன் முருகன் (22) என்பதும், அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் முருகனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தட்டப்பாறை காவல் நிலையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.