அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை வரவேற்று எட்டயபுரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வானார்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், எட்டயபுரம் பேரூராட்சி அதிமுக சார்பாக பட்டத்து விநாயகர் கோவில் முன்பும், பேருந்து நிலையம் முன்பும் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் அவைத்தலைவர் கணபதி, மாவட்ட பிரதிநிதிகள் வேலுச்சாமி, சுப்புலட்சுமி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்ட்டன் பிரபு, சின்னத்துரை, சிவா என்ற சிவசங்கர பாண்டியன், மோகன், சீனா என்ற முத்துகிருஷ்ணன், கார்த்தி, மணி, மகளிர் வார்டு செயலாளர்கள் செல்வி, சாந்தி, ரத்தினம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.