தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் மது பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே பகுதியைச் சேர்ந்தவர் கிங் என்ற கிங்ஸ்டன் (35) அதே பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (35) டேனியல் ராஜ் (31) இவர்கள் மூவரும் இன்று இரவு தாளமுத்துநகர் பகுதியில் உள்ள மொட்டை கோபுரம் அருகே மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குகள் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்தோணிராஜ் கிங் என்ற கிங்ஸ்டனை மது அருந்திய பாட்டிலால் அடித்துக் கொலை செய்து அங்கிருந்து தப்பி ஒடியுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த தாளமுத்துநகர் காவல்துறையினர் இறந்தவர் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக அந்தோணிராஜ்,டேனியல் ராஜ் ஆகிய இருவரையும் தாளமுத்து நகர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.