தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை விலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துதல், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சரவணனின் நிரந்தர பணி நீக்கத்தை ரத்து செய்தல், நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத டாஸ்மாக், அங்கன்வாடி, சத்துணவு, நியாய விலைக்கடை பணியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டமானது, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் கணேசன் சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் செண்பகராஜ், மாவட்ட செயலாளர் ரவி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணிராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் நாகராஜ் நன்றி கூறினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.