• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்!

  • Share on

ராகுல் காந்தி குற்றவாளி என அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பைக் கண்டித்து தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தூத்துக்குடியில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார். எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று அவர் கூறியிருந்தார். 

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள நீதிபதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர்,  தூத்துக்குடியில் இருந்து பெங்களூர் செல்ல இருந்த ரயிலை 1ம் கேட் பகுதியில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில துணை தலைவர் சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், மாமன்ற உறுப்பினர் எடிண்டா, மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, ஐசன்சில்வா, மைக்கேல், சின்னகாளை, பொதுகுழு உறுப்பினர்கள் எடிசன், சாமுவேல் ஞானதுரை, சகாயராஜ், மாவட்ட  அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மீணவர் காங்கிரஸ் துணை தலைவர் கென்னடி, ஐஎன்டியூசி மாநில அமைப்பு செயலாளர் ராஜ், மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ், முடிச்சூடி, சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் கோபால், குமாரமுருகேசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், வார்டு தலைவர்கள் மகாலிங்கம், மைக்கேல் பிரபாகர், வெங்கட சுப்பிரமணியன், தனுஷ், இசக்கிபாண்டியன், சித்திரை பால்ராஜ், கனகராஜ், ராஜா,  ராமசாமி, சண்முகசாமி, கணேசண், மாநில பேச்சாளர்கள் அம்பிகாபதி, சவரியாணந்தம், சுரேஷ் யூஜின், வால்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பங்குனி உத்திர திருவிழா... தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை!

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் செயின் திருட்டு - துாத்துக்குடி பெண்கள் 3 பேர் கைது!

  • Share on