பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்களால் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பங்குனி உத்தரத்தன்று குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்துக்கள் அனைவரும் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இதற்காக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடும் வழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது.
அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களும் குலதெய்வ கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்வதற்கு வசதியாக வரும் ஏப்ரல் 5ம் தேதி பங்குனி உத்திரத்தன்று உள்ளூர் விடுமுறை வழங்குமாறு இந்து முன்னணி மற்றும் இந்து இளைஞர் முன்னணி சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.