உடன்குடி முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆயிஷா கல்லாசி திட்டியதால் விஷம் குடித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தூய்மை பணியாளர் சுடலை மாடன் இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சுடலை மாடனின் பதவி உயர்வு, ஜாதி குறித்து முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆயிஷா நல்லாசி, செயல் அலுவலர் பாபு ஆகியோர் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனை அடுத்து கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்த சுடலை மாடன், உடனடியாக திருச்செந்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ( 21.3.23 ) அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக மருத்துவமனையில் ஆய்வு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூய்மைப்பணியாளர் சுடலைமாடனின் மனைவி மற்றும் மகளை சந்தித்து பேசி ஆறுதல் தெரிவித்தேன். அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவரை வலியுறுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
மேலும், நேற்று ( 22.3.23 ) மத்திய அரசின் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூய்மை பணியாளர் சுடலை மாடனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். பின், ஆணைய தலைவரிடம் சுடலை மாடன் மனைவி மற்றும் மகள் ஆகியோர் மனு அளித்து நடந்து விவரங்களை தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் சுடலை மாடனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து சுடலை மாடன் மனைவி, மகள் உறவினர்களிடம் மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு செல்லும்போது கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணைய தலைவர் வெங்கடேசன் உத்தவிட்டு சென்றார்.
இந்தநிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தூய்மை பணியாளர் சுடலை மாடன் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.