தூத்துக்குடியில் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள் குறித்த 3 நாள் பயிற்சி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கத்தின் (துடிசியா) பொதுச்செயலாளர் .ராஜ்செல்வின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
"தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னை, மற்றும் துடிசியா சார்பில் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், ஏற்றுமதி சட்ட திட்டங்கள் பற்றிய 3 நாள் பயிற்சி தூத்துக்குடியில் மார்ச் 23, 24, மற்றும் 25 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில், ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், பொருளை பதப்படுத்துதல், சீரிய முறையில் பேக்கிங் செய்தல், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்கவரி கணக்கிடல் போன்ற விவரங்கள் விரிவாக விவாதிக்கப்படும்.
மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளைபற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். மற்றும் ஏற்றுமதி-இறக்குமதியில் வங்கிகளின் பங்கு குறித்தும் விளக்கப்படும்.
பயிற்சியில் 18 வயது நிரம்பிய குறைந்தது 10ம் வகுப்பு முடித்த ஆண்/பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கட்டணம் ரூ.4000/- மட்டுமே. முதலில் பதிவு செய்யும் 30 நபர்களே அனுமதிக்கப்படுவார்கள். தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் சான்றிதழ் அளிக்கப்படும். மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.
மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும் : துடிசியா: கதவு எண் 4/158, எட்டையாபுரம் ரோடு, KTC-டிப்போ அருகில் தூத்துக்குடி-2 என்ற முகவரியில் அல்லது 9489981646 / 9443328071 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்வதற்கு பதிவு செய்ய கடைசி தேதி : 23.03.2023. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் துடிசியா அலுவலகத்தில் வந்து பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது