• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்!

  • Share on

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிலுவைப்பட்டி ஆர்சி பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு முதலமைச்சர், மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தையொட்டி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தி நீர் ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கும், தண்ணீரின் சிறப்பை எடுத்து சொல்வதற்கும், தண்ணீர் வீணாவதை தடுப்பதற்கும்,  உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார்  வகித்தார். 

கூட்டத்தில், ஜல் ஜீவன் திட்டம், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் திருநங்கைகள் உள்ளிட்ட இப்பகுதியை சேர்ந்த பலருக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், மின்வாரிய இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை, அதிகாரிகள் ரெங்கதுரை, வாசு, மாப்பிள்ளையூரணி ஆரம்பசுகாதார நிலைய அலுவலர் முகம்மது ஆசீப், கூட்டுறவு ரேஷன்கடை அலுவலர் பிரபாகர், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பொதுப்பணித்துறை கட்டிட மேற்பார்வையாளர் முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, தங்கமாரிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்

  • Share on

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது - 380 கிராம் கஞ்சா பறிமுதல்!

தூத்துக்குடியில் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள் பயிற்சி

  • Share on