தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 50வது வார்டு பகுதியில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக வட்டச்செயலாளர் பூர்ணசந்திரன் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளான கணேசன்காலனி, அமுதாநகர், முனியசாமிநகர், சக்திநகர், சாந்திநகர், என்ஜிஓ காலனி, பாரதி நகர், கிருபை நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதால், கொசு தொல்லை அதிகமாக கானப்படுகிறது. மேலும் கொசுக்களால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சூழலும் நிலவுகிறது.
ஆகவே, திறந்த வெளி மழைநீர் வடிகால்களை மூடிய நிலையில் அமைத்திடவும், வாரத்திற்கு மூன்று நாட்கள் மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், மழைநீர் வடிகால் அமைக்கும் போது சில வீட்டின் மதில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. அவைகள் இதுவரை சரி செய்து கொடுக்கவில்லை. அதனை உடனடியாக சரி செய்து தரும்படியும், உரிய நிவாரணம் வழங்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.
அதே போல், ஈமசடங்கு செய்வதற்கு பைப் அல்லது கிணறு அமைத்து தருதல், வார்டு முழுவதும் தினந்தோறும் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தல், சொந்த கட்டிடத்தில் அங்கன்வாடி அமையம் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக வட்டச்செயலாளர் பூர்ணசந்திரன் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
இந்த நிகழ்வின் போது, 50வது வட்ட அம்மா பேரவை செயலாளர் பாலமுருகன், வட்ட பிரதிநிதி சேர்மராஜ், இளைஞரணி முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.