தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் இன்று தூத்துக்குடியில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் அதன் சுற்று வட்டாரத்தில் மிதமான மழையும், தஞ்சை, தர்மபுரி மற்றும் அரூர், பென்னாகரம், ஒகேனக்கல் உட்பட பல பகுதிகளில் லேசான மழையும் பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.