மே 5ஆம் தேதி 40 வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் உரிமை முழக்கம் மாநாடு நடைபெற உள்ளது. இந்தநிலையில் தூத்துக்குடியில் கன்னியாகுமரி மண்டல வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் வி.இ ரோட்டில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா தலைமை வகித்தார். திருநெல்வேலி மண்டல தலைவர் சுப்பிரமணியன், தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் அல் அமீன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா வரவேற்புரையாற்றினார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவரும், அகில இந்திய வணிகர்கள் சம்மேளத்தின் தேசிய முதன்மை துணைத் தலைவருமான விக்கிரம ராஜா எழுச்சி உரையாற்றினார்.
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாநில கூடுதல் செயலாளர் காளிதாசன், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் சின்னத்துரை, திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளர் செந்தில்குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், பழம் பொருள் அணி நிர்வாகிகள், மாவட்ட துணை நிர்வாகிகள், அனைத்து கிளை சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்